MUJAHITH
Monday, July 29, 2013
ரமலான்
புனித ரமலான் பிறக்கப் போகிறது. பெருமானார் (ஸல்) அவர்கள் ஏராளமான வார்த்தைகளால் வரவேற்ற மாதம். சமுதாயத்தை ஊக்கமும் உற்சாகமும் படுத்திய மாதம்
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون(185)
இன்னும் சில நாட்களில் ரமலான் வர இருக்கிறது.
அல்லாஹ் நமக்கு ஷஃபான் மாத்தின் 29 நாளில் ரமலான் பிறையை காட்டினால் அடுத்த நாள் நோன்பு. இல்லை எனில் அதற்கடுத்த நாளிலிருந்து ரமலான் ஆரம்பமாகும். நபிகள நாயகம் (ஸல்) அவர்களது வழிகாட்டுதலிலும் சஹாபாக்களின் வழி முறைகளிலும் தெளிவாக அறியப்பட்ட நடைமுறையை நாம் பின்பற்றி வருகிறோம்.
சவூதி என்று சொல்லி, சர்வதேச பிறை என்று சொல்லி குழப்பும் தீய சக்திகளை புறக்கணிப்பீர்! இஸ்லாத்தின் எதார்த்த்திற்கும் எளிமைக்கும் எதிரான கூற்று அது. இஸ்லாத்தினோடு தொடர்பில்லாத பேச்சு அது. மார்க்கத்தை விளையாட்டுப் பொருளாகவும் விவாத களமாகவும் எடுத்துக் கொண்டு விட்ட சிலர் ரமலானின் பிறையிலிருந்து தஙகளது பித்தலாட்ட்த்தை ஆரம்பித்து விடுவர். சமுதாயம் அந்த குறும்புக்கார்ர்களை அடையாளம் கண்டு விலகி இருக்க வேண்டும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ - البخاري – 1907
عَنْ كُرَيْبٍ أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَيَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ مَتَى رَأَيْتُمْ الْهِلَالَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ أَوْ نَرَاهُ فَقُلْتُ أَوَ لَا تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ فَقَالَ لَا هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَكَّ يَحْيَى بْنُ يَحْيَى فِي نَكْتَفِي أَوْ تَكْتَفِي- مسلم 1819
ரமலானின் சிறப்பு
குறைவான வார்த்தைகளை பேசும் பழக்க முடைய பெருமானார்(ஸல்) ரமலானின் சிறப்பை வழக்கத்திற்கு மாறாக மிக் நீண்ட வார்த்தைகளில் எடுத்துக் கூறினார்கள்.
عن سلمان الفارسي قال خطبنا رسول الله صلى الله عليه وسلم آخر يوم من شعبان فقال يا أيها الناس انه قد أظلكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من ألف شهر فرض الله صيامه وجعل قيام ليله تطوعا فمن تطوع فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى سبعين فريضة وهو شهر الصبر والصبر ثوابه الجنة وهو شهر المواساة وهو شهر يزاد رزق المؤمن فيه من فطر صائما كان له عتق رقبة ومغفرة لذنوبه قيل يا رسول الله ليس كلنا يجد ما يفطر الصائم قال يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة ماء ومن اشبع صائما كان له مغفرة لذنوبه وسقاه الله من حوضي شربة لا يظمأ حتى يدخل الجنة وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيئا وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار ومن خفف عن مملوكه فيه أعتقه الله من النار قلت ويأتي حديث في فضل الصوم في صوم التطوع
சமுதாயம் அதற்கு தகுந்த ஆர்வத்தை காட்ட வேண்டும்.
ஒரு ரமலானை பெற்றுக்கொள்வது வாழ்வின் மிகப்பெரிய பேறு.
عن طلحة بن عبيد الله أن رجلين قدما على رسول الله صلى الله عليه وسلم وكان إسلامهما جميعا وكان أحدهما أشد اجتهادا من صاحبه فغزا المجتهد منهما فاستشهد ثم مكث الآخر بعده سنة ثم توفي قال طلحة فرأيت فيما يرى النائم كأني عند باب الجنة إذا أنا بهما وقد خرج خارج من الجنة فأذن للذي توفي الآخر منهما ثم خرج فأذن للذي استشهد ثم رجعا إلي فقالا لي ارجع فإنه لم يأن لك بعد فأصبح طلحة يحدث به الناس فعجبوا لذلك فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال من أي ذلك تعجبون قالوا يا رسول الله هذا كان أشد اجتهادا ثم استشهد في سبيل الله ودخل هذا الجنة قبله فقال أليس قد مكث هذا بعده سنة قالوا بلى وأدرك رمضان فصامه قالوا بلى وصلى كذا وكذا سجدة في السنة قالوا بلى قال رسول الله فلما بينهما أبعد ما بين السماء والأرض - احمد
ஷஹீதை விட ரமலானை பெற்றுக் கொண்டவர் அதிக மரியாதைக்குரிய்வர் ஆகிறார்.
கவனிக்க வேண்டும்: ரமலான் வந்து போவது ரமலானை பெற்றுக் கொண்டதாகாது.ரமலானை பெற்றுக் கொள்ளும் வழி ரமலானை இதய சுத்தியோடும் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்பது, அதற்காக தயாராவது,
· பெருமானாரின் அக்கறை -ரஜபிலேயே துஆ – இரண்டு மாத்த்திற்கு முன்பே ரமலானைப் பற்றி சிந்திக்கவும் அதற்காக தயாராகுமாறு தூண்டு கிறது.
· ரஜப் ஷஃபானில் பெருமானார் (ஸல்) அதிகமாக நோன்பு வைப்பார்கள், வாழ்நாளின் ஒரு பொன்னான நேரத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கூடுமான நன்மைகளை செய்ய முயற்சிக்க வேண்டும். குறைந்த பட்ச்ம் தவறுகளை தவிர்க்க வேண்டும்.
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردة الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة -
நோன்பு ரம்லானின் பிரதான கடமை சமுதாயம் இதில் சளைக்காத ஆர்வத்தை காட்டுகிறது. சிறு பிள்ளைகள் முதல் பெரியோர் பெண்களவரை அனைத்து தரப்பாரும் விருப்பத்தோடு இந்த விரத்த்தை மேற்கொள்கின்றனர்
ஒரு சிறு பையன் நோன்பு வைத்தான், அவனது பட்டினியை அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மதியம் நேரத்தில் பையனிடம் சொன்னார். தம்பி சாப்பிடு! இப்போது சாப்பிட்டால் அது இன்னொரு சஹராகிவிடும். உனக்கு இரண்டு நோன்பு கிடைக்கும் என்றார். பையன் மறுத்து விட்டான். எல்லோரும் சாப்பிடும் போதுதான் நானும் சாப்பிடுவேன் என்றான்.
மாற்று மத சகோதர்ர்களை ஆச்சரியப் படுத்தக் கூடியது இஸ்லாமிய நோன்பு.
முஃமின்களது காலில் ஒரு முள் தைத்தால் கூட அதற்கு தனியான நன்மைகளை வழங்குகிற இறைவன் ஒரு பகல் முழுக்க அடியான் பட்டினி கிடக்க, தாகத்தை பொறுத்துக் கொள்ள எவ்வளவு கருணை மழை பொழிவான்?
குழந்தை பள்ளிக்கூட்த்திலிருந்து திரும்பியதும் தாய் எவ்வளவு அக்கறையாக கருணையோடு குழந்தைக்கு சோறூட்டுகிறார். அல்லாஹ்வின் கருணை அதைவிடப் பெரிதல்லவா?
அதனால் தான் நோன்புக்கு நானே கூலி கொடுக்கிறேன் என்கிறான்.
ஒரு சிலர் முதல் மூன்று நோன்பு கடைசி மூன்று நோன்பு என்று ஷார்ட்கட் பயன்படுத்துகின்றனர், தவறு. தள்ளாத முதியோர், கர்ப்பிணிகள் பால் கொடுக்கும் பெண்கள், நோயாளிகளை தவிர மற்ற அனைவரின் மீதும் நோன்பு கட்டாயக் கடமை என்பதை மறக்க கூடாது.
தொழுகை அனைத்து தொழுகைக்களிலும் விஷேச கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தராவீஹ் மற்றும் தஹஜ்ஜது தொழுகைகள்
தராவீஹ் 20 ரக அத்துக்களே!
நீங்கள் தராவீஹ் தொழ நினைத்தால் ஜமாத்துடன் 20 ரக அத் தொழுங்கள். அது தான் மார்க்கம்.
وعن ابن شهاب عن عروة بن الزبير عن عبد الرحمن بن عبد القاري أنه قال خرجت مع عمر بن الخطاب رضي الله عنه ليلة في رمضان إلى المسجد فإذا الناس أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرهط فقال عمر إني أرى لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل ثم عزم فجمعهم على أبي بن كعب ثم خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاة قارئهم قال عمر نعم البدعة هذه والتي ينامون عنها أفضل من التي يقومون يريد آخر الليل وكان الناس يقومون أوله
உமர் (ரலி) ஏற்படுத்திய சுன்னத் இது என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.
அப்போதிலிருந்து இப்போதுவரை மஸ்ஜிதுல் ஹரமிலும், மஸ்ஜிதுன்னபவியிலும் இருபது ரகாத்துகளே தொழப்பட்டு வருகின்றன. மக்கா மதினாவின் வர்லாறு. இப்போது போல 24 மணிநேரமும் வீடியோவில் பதிவு செய்யப் பட்டிருக்கவில்லை என்றாலும் அதற்கு குறையாத வகையில் கவனமாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள பாரம்பரிய பள்ளிவாசல்களின் நடைமுறையும் இவ்வாறே அமைந்துள்ளது. 8, 11, என்ற எண்ணிக்கையில் சொல்லப்படும் ஹதீஸ்கள் பெருமானாரின் தஹஜ்ஜத் தொழுகையே குறிக்கிறது. ரமலானின் விஷேச இரவுத்தொழுகையை அல்ல. இது விசயத்தில் தீர யோசிக்காமல்அவசர முடிவுக்கு வந்து தராவீஹ் விசயத்தில் ஏமாற்றத்திற்கு ஆளாகாதீர்கள்.
ஆரம்பத்தில் தராவீஹ் 8 ரக அத் என்று பேசியவர்கள் பின்னர் இரவுத்தொழுகை 8 ரக அத் என்று மாற்றிக் கொண்ட்தையும், அந்த தொழுகையை கூட ரமலானின் பிறபகுதியில் இரவு 12 மணிக்குமேல் தொழுவதையும் கவனியுங்கள்.
தராவீஹுக்கும் தஹஜ்ஜத் தொழுகைகும் வித்தியாசம் தெரியாமல் குழப்பிக் கொண்டு தீனை கோமாளித்தனமாக்கும் இவர்களது நடைமுறைகளை உதறித்தள்ளுங்கள்.
தஹஜ்ஜுத்: தனித்துவம் மிக்க தஹஜ்ஜத் தொழுகைக்கு ரமலான் ஒரு நல்ல வாய்ப்பாகும். சஹருக்கு சற்று நேரம் முன்னதாக எழுந்திருத்தால் போதுமானது.
குறைந்த பட்சம் 8 அதிக பட்சமாக 12 ரக அத் தஹஜ்ஜுத் தொழுலாம்.
டிவி
சஹர் நேரத்தில் டி வி பார்க்கிற பழக்கத்தை விட்டுவிட்டால் தஹஜ்ஜத் தொழுகை இலேசாகி விடும். என்னதான் சிறந்த பயான் என்றாலும் திட்டவட்டமாக் முடிவெடுத்து சஹர் நேரத்தில் டி வி யை ஆப் செய்துவிட்டு சஹர் செய்து பாருங்கள். அமைதியான சஹரை அனுபவிப்பீர்கள். தஹஜ்ஜுத் தொழுவும் குர் ஆன் ஓதவும் போதிய நேரம் கிடைக்கும்.
குர் ஆன்
ரமலானின் சிறப்பே குர் ஆன் தான். அதிமாக குரான் ஓத வேண்டும்.பெருமானாருக்கு ஜிப்ரயீல் (அலை) ஒரு முறை குர் ஆனை ஓதிக்காட்டுவார். இமாம் அபூஹனீபா ஒரு ரமாலானில் 63 முறை குரான் ஒதும் பழக்கம் கொண்டிருந்தார். பகலில் ஒன்று இரவில் ஒன்று. ஒரு மாத தராவீஹில் 3 குர் ஆன். இந்த ரமலானுக்கு என ஒரு குறிப்பிட்ட செயலை திட்டமிட்டுக் கொண்டால் ரமலானை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
குர் ஆன் ஓதப்பழகுவது, அல்லது பெருமானாரின் வரலாற்றை படிப்பது, கலீபாக்கள் சஹாபாக்களின் வரலாற்றை படிப்பது, அல்லது ஹதீஸ் நூல் ஒன்றை படித்து முடித்துவிடுவது என்று ஒரு திட்ட்த்தை வகுத்துக் கொண்டால் ஒரு ரமலான் எப்படி கழிந்த்து என்பதை பல வருடங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ள முடியும். இவை ரமலானை அர்த்தப் படுத்திக் கொள்ளும் முயற்சியாக அமையும்.
தர்மம்
ரமலானில் பெருமானார் (ஸல்) அவர்கள் வீசும் காற்றை விட அதிகமாக தர்மம் செய்வார்கள். ஒரு அற்புதமான வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இயன்ற வழிகளிலெல்லாம் அதை பயன்படுத்திக் கொளுவது புத்திசாலித்தனம்.
عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه- نسائي
عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عند كل فطر عتقاء وذلك في كل ليلة - ابن ماجة
Subscribe to:
Posts (Atom)